Gallery

Bigg Boss 3 Winner, Mugen Rao: அந்நியனுக்கு அங்கீகாரம்: டைட்டில் வின்னரான முகென் ராவ்!

Bigg Boss 3 Winner, Mugen Rao: அந்நியனுக்கு அங்கீகாரம்: டைட்டில் வின்னரான முகென் ராவ்!

Bigg Boss 3 Winner, Mugen Rao: அந்நியனுக்கு அங்கீகாரம்: டைட்டில் வின்னரான முகென...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 2 சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரி உள்பட 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Bigg Boss Winner: தர்ஷனுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்த கமல் ஹாசன்!

அவர்கள், சாண்டி, கவின், கஸ்தூரி, லோஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி, வனிதா, ரேஷ்மா, ஷெரின், சரவணன், மோகன் வைத்யா, தர்ஷன், சேரன், முகென், மீரா மிதுன், மதுமிதா, கஸ்தூரி ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மக்களின் வாக்குகள் அடிப்படையில், வாரந்தோறும் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சந்தோஷம், சண்டை, காதல், நட்பு, அண்ணன் – தங்கை பாசம், அப்பா – மகள் உறவு என்று அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி பரபரப்பாக சென்றது. இந்நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த தர்ஷன் தான் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வருவார் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில், தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.
அதற்கு முன்னதாக, கவின் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். ஒருவேலை கவின் வெளியேறாமல் இருந்திருந்தால், இறுதிப் போட்டி வரை கவின் வந்திருப்பார். போட்டியும் மாறியிருக்கும் என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

Bigg Boss Winner: டைட்டில் வின்னரான முகெனுக்கு டிராபி, ரூ.50 லட்சம் பரிசு வழங்கிய கமல் ஹாசன்!

இறுதியில், 105 ஆவது நாளில், 4 போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில், 106 ஆவது நாளான இன்று இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடந்தது. இதில், யார் டைட்டில் வின்னராக வருவார் என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

ஷெரின் வெளியேற்றம்:

இதில், ஒவ்வொருவராக வெளியேற போட்டியாளர்களிடையே பதட்டம் ஏற்படவில்லை. மாறாக ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டினர். சாண்டி, முகென், லோஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்களில் ஷெரின் வெளியேற்றப்பட்டார். அவருக்கு சிறந்த நண்பருக்கான விருது வழங்கப்பட்டது. இதே போன்று தர்ஷனுக்கு ஆல் ரவுண்டர் விருது வழங்கப்பட்டதோடு, கமல் ஹாசனின், ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கமல் ஹாசனைப் போன்று வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஸ்ருதி ஹாசன், லோஸ்லியாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அழைத்து வந்தார். ஆம், 2 ஆவது ரன்னராக வெளியேற்றப்பட்டார். பின்னர், கமல் ஹாசனிடம் கூறுகையில், இதுவும் ஒரு வெற்றிதான். மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Sandy: சந்தோஷமாக வெளியேறிய ஷெரின், இறுதி போட்டியில் சாண்டிக்கு ஆதரவு!

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முகென் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முகென், தனது நண்பருடன் பிக் பாஸ் டிராபியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனினும், முகென் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வானதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முகென் டைட்டில் வின்னராக வந்ததற்கு அபிராமிதான் உண்மையில் சந்தோஷப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்ஷனைப் போன்று முகெனுக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author Mohamed Abu 'l-Gharaniq

when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries.

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Start typing and press Enter to search